உயிரிழந்த தூய்மைப்பணியாளரின் குடும்பத்திற்கு நிதி உதவி

நிதி உதவி வழங்கிய 11-வது வார்டு பகுதி மக்களுக்கு மக்கள் கோரிக்கை மையம் சார்பில் நன்றியையும் தெரிவித்து கொண்டார்.காங்கயம் நகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.
நிதி உதவி வழங்கிய போது எடுத்த படம்.
நிதி உதவி வழங்கிய போது எடுத்த படம்.
Published on

முத்தூர்:

காங்கயம் நகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.

காங்கயம் நகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தவர் பழனி. இவர் கடந்த 4-ந் தேதி இயற்கை எய்தினார். இவரது மனைவியும் காங்கயம் நகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு மக்கள் கோரிக்கை மையம் சார்பில் நகராட்சி 11-வது வார்டு பொதுமக்களின் உதவியோடு ரூ.35 ஆயிரம் நிதி சேகரிக்கப்பட்டு அவரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கயம் நகர்மன்ற உறுப்பினர் கே.டி.அருண்குமார் பங்கேற்று, பழனியின் குடும்பத்தினருக்கு மேற்கண்ட தொகையை வழங்கினார். மேலும் நிதி உதவி வழங்கிய 11-வது வார்டு பகுதி மக்களுக்கு மக்கள் கோரிக்கை மையம் சார்பில் நன்றியையும் தெரிவித்து கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com