

அவிநாசி:
சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சியால் வாழை மற்றும் பருத்தி சாகுபடியில் ஈடுபட திருப்பூர் மாவட்ட விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.இது குறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது:-
பொதுவாக மார்கழி சீசனில் சின்னவெங்காயத்திற்கு கிலோவுக்கு ரூ.60 வரை விலை கிடைக்கும். ஆனால் இந்தாண்டு கிலோவுக்கு அதிகபட்சம் ரூ.35 வரை மட்டுமே விலை கிடைப்பதால் பலரும் சாகுபடி பரப்பை குறைத்துள்ளனர்.
இந்தாண்டு வழக்கத்தை காட்டிலும் மழை அதிக அளவில் பெய்தது. பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் சின்ன வெங்காய சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் வாழை மற்றும் பருத்தி சாகுபடியில் ஈடுபட துவங்கியுள்ளனர். அதற்கேற்ப வாழை மற்றும் பருத்திக்கு தற்போது சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.