பணம் பறிக்கும் கும்பல் - வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் மூலம் எச்சரிக்கை எஸ்.எம்.எஸ்.,

உதவி செய்வது போன்ற போர்வையில் வாடிக்கையாளரின் பணத்தை ஏமாற்றி அபகரிக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்

வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயல் அதிகரிப்பதால் திருப்பூரில் வங்கிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்படுகிறது.

வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.,களுக்கு செல்வோரை பின்தொடர்ந்து செல்லும் கும்பல்  அவர்களின் கவனத்தை திசை திருப்பியோ, அவர்களுக்கு உதவி செய்வது போன்று நடித்தோ அவர்களது பணத்தை ஏமாற்றி அபகரித்து விட்டு ஓடி விடுகின்றனர்.குறிப்பாக வங்கிக்கு வரும் முதியவர்கள் வங்கியில் பணம் செலுத்துவது, எடுப்பது போன்றவற்றில் தடுமாறுகின்றனர். 

இதனால் வங்கியில் உள்ள பிற வாடிக்கையாளர்களின் உதவியை நாடுகின்றனர். இதை பயன்படுத்தி  அவர்களுக்கு உதவி செய்வது போன்ற போர்வையில் அவர்களின் பணத்தை ஏமாற்றி அபகரிக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன.

எனவே வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை தங்கள் வங்கிக்கணக்கில் செலுத்துவது, எடுப்பது போன்ற பணிகளை தாங்களாகவே செய்து கொள்ள வேண்டும் என்ற ‘அலர்ட்’ செய்தியை  வாடிக்கையாளர்களின்  செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com