பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

தமிழக சுற்றுச்சூழல் துறை சார்பில் 100 பேருக்கு பசுமை சாம்பியன் விருது வழங்க உள்ளது. விருது பெறுவோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக செயல்படும் தனிநபர்கள், தன்னார்வ அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்டம்தோறும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் இதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

விருதுக்கு விண்ணப்பிக்க 15-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

www.tnpcb.gov.in என்கிற தமிழக மாசுகட்டுப்பாடு வாரிய தளத்திலிருந்து விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com