தொற்று பாதிப்பு குறைந்ததால் அரசு ஆஸ்பத்திரியில் காலியாக கிடக்கும் படுக்கைகள்

ஜனவரி இறுதியில் 10ஆயிரத்திற்கும் அதிகமானோர் வீட்டுத் தனிமையிலேயே இருந்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

கடந்த மாதம் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமெடுத்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தாராபுரம், உடுமலை, பல்லடம், அவிநாசி, காங்கயம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா பிரத்யேக வார்டு ஏற்படுத்தப்பட்டு வார்டுகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

மாவட்டத்தின் தினசரி பாதிப்பு 1,700 ஐ கடந்து பதிவாகிய போதும் மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட வீட்டுத்தனிமையில் கண்காணிப்பில் இருப்பவர்களே அதிகமாக இருந்தனர். ஜனவரி இறுதியில் 10ஆயிரத்திற்கும் அதிகமானோர் வீட்டுத் தனிமையிலேயே இருந்தனர்.

திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, 30க்கும் குறைவாகவே இருந்தது. கடந்த ஒரு வாரமாக கொரோனா வெகுவாக குறைந்து, தொற்றில் இருந்து மீண்டு நலம் பெறுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஏற்கனவே கொரோனா வார்டில் இருக்கும் பலர் நலம் பெற்று வீடு திரும்புவதால், கொரோனா சிறப்பு வார்டு படுக்கைகள் காலியாக தொடங்கியுள்ளது.

இதுகுறித்து மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனர் பிரேமலதா கூறுகையில்:

மருத்துவ கல்லூரி மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் 366 படுக்கைகள் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற ஏற்படுத்தப்பட்டன. இவற்றில் 63 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மீதி 303 படுக்கைகள் காலியாக உள்ளது என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com