கிராமங்களில் அஞ்சல்துறையின் இணையவழி பண பரிவார்த்தனை

மூத்த குடிமக்கள், பொதுமக்கள் அஞ்சலகம் மூலமாக வழங்கப்படும் இணையவழி நிதிப் பரிவர்த்தனை சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள விவசாயிகள், மூத்தகுடிமக்கள் அஞ்சலகம் மூலமாக வழங்கப்படும் இணையவழி நிதிப் பரிவர்த்தனை சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆர். கலைசெல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இந்தியா முழுவதும் உள்ள 1.5 லட்சம் அஞ்சல் அலுவலகங்களும் இணையவழியாக ஒருங்கிணைக்கப்படுவதன் மூலமாக அலைபேசி, இணையம், ஏடிஎம். மூலமாக நிதிப் பரிவர்த்தனை செய்துகொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது.

எனவே திருப்பூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள விவசாயிகள், மூத்த குடிமக்கள், பொதுமக்கள் அஞ்சலகம் மூலமாக வழங்கப்படும் இணையவழி நிதிப் பரிவர்த்தனை சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com