சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 11 பேர் கைது

வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த வெள்ளகோவில் அறிவொளி நகர் பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மகன் கோவிந்தராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் நேற்று புதுப்பை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த மூர்த்தி( வயது 45) என்பவர் அரசு அனுமதியின்றி மதுபானங்களை விற்பனை செய்தார். இதையடுத்து மூர்த்தியை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமாதேவி நேற்று வெள்ளகோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது நகராட்சி அலுவலகம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த வெள்ளகோவில் அறிவொளி நகர் பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மகன் கோவிந்தராஜ் என்பவரை கைது செய்தார்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூ திருப்பூர் பகுதியில் சட்டவிரோதமாக சீட்டாட்டத்தில் ஈடுபட்ட 9 நபர்களை பெருமாநல்லூர் காவல்துறையினர் கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.1,70,100ஐ பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com