மின்னணு வாக்குப்பதிவு எந்திர அறைக்கு சீல்வைப்பு

எந்திரங்கள் வைத்துள்ள அரங்கம் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சியிலுள்ள 60 வார்டு கவுன்சிலர் பதவிக்கான ஓட்டுப்பதிவு கடந்த 19-ந் தேதி நடந்தது. இதில் 4 மண்டலங்களில் 776 ஓட்டுச்சாவடி மையங்களில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. ஓட்டுப்பதிவு முடிந்து இந்த எந்திரங்கள் எண்ணிக்கை மையமான சிக்கண்ணா கல்லூரி கொண்டு சென்று பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. 

22-ந்தேதி, ஓட்டு எண்ணிக்கை நடந்தது. எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் அவை பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு நஞ்சப்பா பள்ளி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. எந்திரங்கள் வைத்துள்ள அரங்கம் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com