தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.5 லட்சம் பறிமுதல்

பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம்.
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி மண்டலம் 4-க்கு உட்பட்ட ஆண்டிபாளையம் பிரிவு பகுதியில் தேர்தல் பறக்கும்படை குழுவை சேர்ந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவா மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  

அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டனர். 

சோதனையில் காரில் கட்டுக்கட்டாக ரூ.5 லட்சம் பணம் இருந்தது. காரில் வந்த திருப்பூர் ராயபுரம் ரங்கநாதபுரம் 2-வது வீதியை சேர்ந்த வினோத் என்பவரிடம் விசாரணை நடத்திய போது அவரிடம் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லை. 

இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். மேலும் வினோத் அந்த பணத்தை எங்கு கொண்டு சென்றார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com