எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா:சிவன்மலை முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடைபெற்றது. கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
சிவன்மலை முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்த காட்சி. 
சிவன்மலை முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்த காட்சி. 
Published on

காங்கயம்:

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு, காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடைபெற்றது.

நிகழ்ச்சி அ.தி.மு.க. காங்கயம் நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் தலைமை தாங்கினார். இதில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., முன்னிலையில் தங்கத் தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில் அ.தி.மு.க. காங்கயம் ஒன்றிய செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ், வெள்ளகோவில் ஒன்றியக்குழு தலைவர் வெங்கடேச சுதர்சன், வெள்ளகோவில் நகர செயலாளர் டீலக்ஸ் மணி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com