

திருப்பூர்:
ஒவ்வொரு ஆண்டும் மாநில முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. தடகளம், குழு விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பெறுவோருக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும்.
கடந்த, 2019 - 2020 ம் ஆண்டு சென்னையில் நடந்த மாநில முதல்வர் கோப்பை போட்டியில், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, 20 பேர் பங்கேற்றனர். இவர்களில், 100 மீ., ஓட்டத்தில் கார்த்திகேயன் முதலிடம், சங்கிலி குண்டுஎறிதலில் நிர்மல்ராஜ் முதலிடம், ஈட்டிஎறிதலில் ராகுல் இரண்டாமிடம் பெற்றனர்.
முதலிடம் பெற்ற இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாமிடம் பெற்றவருக்கு, 75 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. நீளம் தாண்டுதலில் சன்மந்த்தர்ஷன் ஐந்தாமிடம் பெற்றார். இரு தங்கம், ஒரு வெள்ளி வென்றதன் மூலம் தடகளத்தில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் இரண்டாமிடத்தை திருப்பூர் மாவட்டம் கைப்பற்றியுள்ளது.
வெற்றி பெற்று பெருமை சேர்ந்த மாணவர்களை கலெக்டர் வினீத், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால், மாவட்ட தடகள பயிற்சியாளர் திவ்யநாகேஸ்வரி, மாவட்ட தடகள சங்க இணை செயலாளர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பாராட்டினர்.