பொதுமக்கள் மறியலில் ஈடுபட்ட நிலையில் அடிப்படை வசதிகளுக்கான பணிகள் தொடக்கம்

சாக்கடை கால்வாய் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதி பணிகள் நடைபெற்று வருகிறது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

திருப்பூர் செல்லாண்டியம்மன் துறை பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.  

தற்போது அங்கு சாக்கடை கால்வாய் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதி பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com