வெள்ளகோவிலில் ரூ.1 கோடியே 34 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

மொத்தம் ரூ.1 கோடியே 34லட்சத்து 42ஆயிரத்து 30க்கு வணிகம் நடைபெற்றது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். 

இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள், நேற்று 240 விவசாயிகள் கலந்து கொண்டு 1 லட்சத்து42ஆயிரத்து 2 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.  

இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், கொடுமுடி, ஈரோடு பகுதியைச் சேர்ந்த12 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 98.50க்கும், குறைந்தபட்சம் ரூ.83.65க்கும் கொள்முதல் செய்தனர்.

நேற்று மொத்தம் ரூ.1 கோடியே 34லட்சத்து 42ஆயிரத்து 30க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com