என்.சி.சி., மாணவர்களுக்கான சான்றிதழ் தேர்வு

என்.சி.சி.யில் சேருவதற்கு மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
தேர்வில் பங்கேற்ற மாணவர்கள்.
தேர்வில் பங்கேற்ற மாணவர்கள்.
Published on

திருப்பூர்:

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வியுடன் சேர்த்து உடல் மற்றும் மன உறுதியை வளர்க்கும் வகையில் தேசிய மாணவர் படை என்னும் என்.சி.சி நடைபெற்று வருகிறது. இதில் சேரும் மாணவர்களுக்கு சான்று வழங்கப்பட்டு வருகிறது. 

வேலை வாய்ப்பின் போது இந்தச் சான்றிதழுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படுகிறது. தமிழக அரசின் சில துறைகளுக்கான வேலை வாய்ப்பில் என்.சி.சி சான்றிதழ் இருந்தால் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுகிறது.

அதனால் என்.சி.சி.யில் சேருவதற்கு மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் திருப்பூரில் என்.சி.சி மாணவர்களுக்கு ‘ஏ’ சான்றிதழ் பெறுவதற்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com