கொப்பரை கொள்முதல் நிலையம் - விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டுகோள்

விவசாயிகளிடமிருந்து அரவை கொப்பரை விலை கிலோ ரூ.105.90 மற்றும் பந்து கொப்பரை கிலோ ரூ.110 க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

உடுமலை:

தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், ‘நாபெட்’ நிறுவனம் வாயிலாக கொப்பரை கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் உடுமலை, பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் குறைந்தளவு விவசாயிகளே பதிவு செய்துள்ளதால் அனைத்து தென்னை விவசாயிகளும் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

விவசாயிகளிடமிருந்து அரவை கொப்பரை விலை கிலோ ரூ.105.90 மற்றும் பந்து கொப்பரை கிலோ ரூ.110 க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கர் தென்னை சாகுபடி செய்திருந்தால் 216 கிலோ கொள்முதல் செய்யப்படும்.

தினமும் 2,400 கிலோ வரை கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கிக் கணக்கு விபரத்துடன் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை அணுகி முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு பெதப்பம்பட்டி-97109 21187, உடுமலை -99409 19150 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தாங்கள் உற்பத்தி செய்த கொப்பரைகளை விற்பனை செய்யலாம். கொள்முதல் செய்யப்படும் கொப்பரைக்கு உரிய தொகை உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com