கார்- ஜீப் நேருக்கு நேர் மோதல்; ஒருவர் பலி

கோவை நோக்கி வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.விபத்தால் அந்தப் பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
விபத்துக்குள்ளான கார்கள். 
விபத்துக்குள்ளான கார்கள். 
Published on

பல்லடம்:

கோவை காட்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் மூர்த்தி ( வயது 51),டேவிட் ராஜ் (33), சுரேஷ் (36) , வெள்ளிமலை (33) ஆகிய 4 பேரும் ஜீப்பில் கோவையில் இருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஜீப்பை வெள்ளிமலை ஓட்டி வந்தார். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே உள்ள பெரும்பாளி என்ற இடம் அருகே சென்ற போது முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் ஜீப்பில் வந்த 4 பேருக்கும், எதிரே வந்த காரில் பயணம் செய்த உடுமலையை சேர்ந்த திராவிடமணி (69) ,அவரது மனைவி மீனாட்சி (56) ,மகள் கிருத்திகா (29,)ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடம் வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூர்த்தி (51) ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.

பலத்த காயமடைந்த மற்றவர்களுகுகு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் தனியார் மருத்துவமனையிலும் கோவை தனியார் மருத்துவமனையிலும் சேர்த்தனர். இந்த விபத்தால் அந்தப் பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com