

அவிநாசி:
அவிநாசி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 12 இடங்களில் தி.மு.க., வெற்றி பெற்றது. மற்ற 6 இடங்களில் அ.தி.மு.க, வெற்றி பெற்றது. இதனையடுத்து இன்று நடைபெற்ற பேரூராட்சி தலைவர் தேர்தலில் தனலட்சுமியை அதிகாரபூர்வ வேட்பாளராக தி.மு.க, தலைமை அறிவித்து இருந்தது .
இந்தநிலையில் இன்று நடைபெற்ற தலைவர் தேர்தலில் அவரை எதிர்த்து தி.மு.க., போட்டி வேட்பளராக சசிகலா வேட்பு மனுதாக்கல் செய்தார். அ.தி.மு.க சார்பில் சித்ரா போட்டியிட்டார்.
மும்முனை போட்டி நிலவிய நிலையில் நடைபெற்ற தேர்தலில் 3 பேரும் தலா 6 வாக்குகள் பெற்று சம அளவில் இருந்தனர். இதையடுத்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யலாம் என்று தேர்தல் அதிகாரிகள் கூறியதற்கு தி.மு.க.வினர் மறுத்துவிட்டனர். இதனால் தொடர்ந்து சலசலப்பு ஏற்பட்டது. யார் வெற்றி பெறுவார்கள் என்பதில் இழுபறி நீடித்து வருகிறது.