சாமளாபுரத்தில் தூய்மை பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் விநாயகா பழனிச்சாமி, பேரூராட்சி செயல்அலுவலர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கழிவுநீர் குழாய் பராமரிப்பு, பொதுக்கழிப்பறைகளை சுத்தம் செய்தல் மற்றும் சுகாதாரம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தூய்மை பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்ற காட்சி.  
தூய்மை பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்ற காட்சி.  
Published on

மங்கலம்:

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்திற்கான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் விநாயகா பழனிச்சாமி, பேரூராட்சி செயல்அலுவலர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சாமளாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மழைநீர் வடிகால் சுத்தம் செய்தல் குறித்தும்,கழிவுநீர் குழாய் பராமரிப்பு, பொதுக்கழிப்பறைகளை சுத்தம் செய்தல் மற்றும் சுகாதாரம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com