இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலாளர் கலையரசி தலைமை தாங்கினார்.
பாராட்டு விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
பாராட்டு விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

பல்லடம்:

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பல்லடம், பொங்கலூர் ஒன்றிய கிளைத் துவக்க விழா மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் வானவில் மன்ற கருத்தாளர்கள் சமுதாய பங்கேற்பாக கோடை விடுமுறையில் நடத்திய ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவில் உறுதுணையாக செயல்பட்ட இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலாளர் கலையரசி தலைமை தாங்கினார்.

மாவட்ட இணை செயலாளர் ராணி ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.பல்லடம் கிளை செயலாளர் சரண்யா வரவேற்றார்.இந்தநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பல்லடம் ரெயின்போ ரோட்டரி சங்க தலைவர் சுந்தர்ராஜன், ரோட்டரி உதவி ஆளுநர் கவிதா சுந்தர்ராஜன் மற்றும் ஆசிரிய பயிற்றுனர் மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் கௌரிசங்கர் இயக்க செயல்பாடுகள் குறித்து பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி பல்லடம், பொங்கலூர் கிளை பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வித் தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com