ஆல்கொண்டமால் கோவில் விழா ரத்து

ஆயிரக்கணக்கான விவசாயிகள் நீண்ட வரிசையில் நின்று ஆல் கொண்டமாலை வழிபடுவார்கள்.
ஆல்கொண்டமால் கோவில்.
ஆல்கொண்டமால் கோவில்.
Published on

உடுமலை:

உடுமலை அருகே பெதப்பம்பட்டியில் உள்ள ஆல்கொண்டமால் கோவிலில் பொங்கலை ஒட்டி ஆண்டுதோறும் தமிழர் திருநாள் விழா 3 நாட்கள் கொண்டாடப்படும். கால்நடைகளை காக்கும் தெய்வமாக கருதும் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளின் பாலினால் ஆல்கொண்ட மாலுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். 

ஆயிரக்கணக்கான விவசாயிகள் நீண்ட வரிசையில் நின்று ஆல்கொண்டமாலை வழிபடுவார்கள். இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com