திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., பள்ளியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா

விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன.
அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டபோது எடுத்தபடம். 
அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டபோது எடுத்தபடம். 
Published on

திருப்பூர்:

திருமுருகன் பூண்டி ஏ.வி.பி. டிரஸ்ட் நேஷனல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 92-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாணவர்கள் வெண்மை, கருமை, சிகப்பு, மஞ்சள் வண்ணத்தில் ஆடை அணிந்து கலாமின் திருமுகம் தோன்ற அணிவகுத்து அமர்ந்த காட்சியானது கலாமை நேரில் காண்பது போன்ற எண்ண அலைகளை உருவாக்கியது. மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து ராக்கெட் ஒன்றை உருவாக்கி அதன் அருகில் கலாம் நிற்பது போன்று அமைத்திருந்த காட்சியும், கலாமின் நூற்றுக்கணக்கான பொன்மொழிகளை எழுதி மரங்களில் வரிசையாக தோரணம்போல் கட்டியிருந்த காட்சியும் காண்போரை கவர்ந்தது. "பசுமை இந்தியாவை" நினைவுபடுத்தும் விதமாக அவரைப் போலவே வேடமணிந்த மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். மேலும் மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. விழாவில் பள்ளியின் முதல்வர் பிரியாராஜா, ஒருங்கிணைப்பாளர் அபிதாபானு, மேலாளர் ராமசாமி, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com