

உடுமலை:
உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினத்தைச் சேர்ந்தஉடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் பொறுப்பாளர் அருள்செல்வன் என்ற கருணாநிதி. இவரது தந்தை அருணாசலம் (வயது86).வயது மூப்பின் காரணமாக மரணமடைந்தார்.
ஆன்மீகவாதியான அருணாசலம் உடுமலை இலக்கிய வரலாற்று பக்கங்களிலும் எழுதியுள்ளார். இவர் அவரது கண்களை தானம் செய்ய முடிவு செய்திருந்தார். இந்தநிலையில் அருணாசலம் மரணமடைந்ததையடுத்து அவரது கண்கள் தானம் செய்யப்பட்டது.
இதேபோல் அருணாசலத்தின் மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்தார். அவரது உடல் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
அருணாசலத்தின் மகன் அருள்செல்வன் கண் தானம் மற்றும் உடல் தானம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.