வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்க 75 பறக்கும் படைகள் அமைப்பு

மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளக்கோவிலில் வாகன சோதனை நடைபெற்ற காட்சி.
வெள்ளக்கோவிலில் வாகன சோதனை நடைபெற்ற காட்சி.
Published on

வெள்ளகோவில்:

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் தேர்தலுக்காக பறக்கும் படை அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்க 75 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

 வெள்ளகோவில் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சோதனையின்போது சாலையில் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி வாகனங்களுடைய ஆவணங்கள் மற்றும் வாகனங்களில் உள்ள பொருட்களை சோதனையிட்ட பிறகே வாகனங்கள் செல்ல அனுமதித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com