பல்லடம் அருகே ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிய திட்டப்பணிகள் தொடக்க விழா

பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ.,தலைமை வகித்து திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.25.6 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது.
 புதிய திட்டப்பணிகளை எம் .எஸ் .எம் .ஆனந்தன் எம் எல். ஏ., தொடங்கி  வைத்த போது எடுத்த படம்.
 புதிய திட்டப்பணிகளை எம் .எஸ் .எம் .ஆனந்தன் எம் எல். ஏ., தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
Published on

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.25.6 லட்சம் மதிப்பில் வெங்கிட்டாபுரம் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுதல், மற்றும் நாசுவம்பாளையம் அருகே உள்ள சுகாதார வளாகம் கட்டுதல், வடுகபாளையம் புதூர் ஊராட்சி மன்ற அலுவலக முன்பகுதி தரைத்தளத்திற்க்கு பேவர் பிளாக் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அமைக்கப்படும் திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.

பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ.,தலைமை வகித்து திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.,கே.பி பரமசிவம், ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன், மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி லோகநாதன், அதிமுக., தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com