குன்னத்தூர் பஸ் நிலையம் பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் - பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

நான்கு வழி சந்திப்பு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.அங்காளம்மன் கோவில் இடமானது குன்னத்தூர் பேரூராட்சிக்கு சொந்தமானதாகும்.
பேரூராட்சி அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றக் காட்சி.
பேரூராட்சி அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றக் காட்சி.
Published on

ஊத்துக்குளி:

குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் கொமரசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜோதிமணி சோமசுந்தரம், செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குன்னத்தூர் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள நான்கு வழி சந்திப்பு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரவுண்டானா அமைக்க வேண்டும். இதற்கு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அங்காளம்மன் கோவில் இடமானது குன்னத்தூர் பேரூராட்சிக்கு சொந்தமானதாகும்.

அந்த நிலத்தில் ஊத்துக்குளி சாலையையொட்டி மேற்புறம் 4 மீட்டர் அகலத்திலும், கோவிலில் வடபுறம் பெருமாநல்லூர் சாலையை ஒட்டி 4 மீட்டர் அகலத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் ரவுண்டானா அமைப்பதற்கு ஏதுவாக நெடுஞ்சாலைத்துறைக்கு ஒப்படைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com