அவினாசி அருகே அனுமதியின்றி செயல்பட்ட பாருக்கு சீல் வைப்பு

அவினாசி போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் லோகநாதன் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டார்.முத்துச்சாமி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

அவினாசி

அவினாசியை அடுத்து கருவலூர் டாஸ்மாக் மதுக் கடை அருகில் சட்டவிரோதமாக பார் நடத்தி வருவதாக அவினாசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அவினாசி போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் லோகநாதன் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டபோது அங்கு சட்டவிரோதமாக பார் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

விசாரணையில் சட்டவிரோத பார் நடத்திய நைனாம்பாளையத்தை சேர்ந்த முத்துச்சாமி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அனுமதியின்றி நடத்தப்பட்ட பார் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com