மோட்டார் சைக்கிள் விபத்தில் மில் ஊழியர் பலி

திருமணம் ஆகி ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அன்பழகன்.
அன்பழகன்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கணியூரை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 27).அங்குள்ள தனியார் மில்லில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. நேற்று மாலை தனது மகளை இருசக்கர வாகனத்தில் முன்புறம் அமர வைத்துக் கொண்டு வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள கடைக்குச் சென்றார். அப்போது அதே வழியில் மிக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேராக அன்பழகன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வாகனம் தூக்கி வீசப்பட்டது .

அப்போது தன் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு அன்பழகன் குழந்தையை அணைத்து பிடித்துக்கொண்டார். இருப்பினும் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை பொதுமக்கள் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு அன்பழகன் இறந்தார். இந்த விபத்தில் குழந்தை லேசான காயத்துடன் உயிர் தப்பியது. இந்த விபத்து குறித்து மடத்துக்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com