லாரி மோதி மெக்கானிக் பலி

தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். விபத்து குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

வெள்ளகோவில் :

திருவாரூர் மாவட்டம் கோவில்பத்து என்ற பகுதியை சேர்ந்த பரணி (வயது 20) என்பவர் வெள்ளகோவில் பகுதியில் தங்கி ஓயி எந்திரம் மெக்கா னிக்காக வேலை செய்து வந்தார். நேற்று இரவு கோவை -திருச்சி ரோட்டில் வெள்ளகோவில் அருகே உள்ள சொரியங்கிண த்துப்பாளையம் பிரிவு ரோடு அருகே பைக்கில் சென்ற போது பரமத்தி யிலிருந்து திருப்பூரை நோக்கி வந்த டிப்பர் லாரி பரணி மீது மோதியது, இதனால் பலத்த அடிபட்ட பரணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவி த்தனர்.

இந்த விபத்து குறித்து வெள்ள கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெ க்டர் கே. ராசு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com