மங்கலம் அரசு பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

வன்முறை ஒழிப்பு தின சட்ட விழிப்புணர்வு முகாம் மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமில் பெண்களுக்கு எதிரான வன்முறை சார்ந்த சட்டங்களை பற்றி மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மங்கலம் அரசு பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
Published on

மங்கலம் ;

திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின சட்ட விழிப்புணர்வு முகாம் மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷ்வரிநம்பி வரவேற்று பேசினார்.

வழக்கறிஞர்கள் தினேஷ்குமார் ,தமிழழகன், சி.எம்.அருணாச்சலம், கோபிநாத்,ரேவதி கோபிநாத், மத்திய போலீஸ் நிலைய உதவி ஆய்வாளர் புனிதவள்ளி, மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பைசல்ராஜா வாழ்த்தி பேசினர்.

முகாமில் குற்றவியல் நீதித்துறை நடுவர் பழனிக்குமார் தலைமை தாங்கினார். முடிவில் முதுகலை ஆசிரியர் வாணீஸ்வரி நன்றி கூறினார். முகாமில் பெண்களுக்கு எதிரான வன்முறை சார்ந்த சட்டங்களை பற்றி மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com