13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை

வெளியூருக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

திருப்பூர்

திருப்பூா், செல்லம் நகரை சோ்ந்தவா் ரவி (வயது 48). பின்னலாடை நிறுவன தொழிலாளியான இவா், அதே பகுதியைச் சோ்ந்த 8 ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடந்த 2022 அக்டோபா் 25 ந்தேதி வெளியூருக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இது குறித்து தெற்கு மகளிா் காவல் நிலையத்தில் சிறுமி தாயாா் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீசாா் போகசோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரவியை கைது செய்து சிறையில் அடைத்தனா். இது தொடா்பான வழக்கு திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் மீதான விசாரணை நிறைவடைந்து நீதிபதி பாலு தீா்ப்பளித்தாா். இதில் ரவிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜமீலா பானு ஆஜரானாா்.

X

Maalai Malar
www.maalaimalar.com