சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 53 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை

தொழிலாளர்களின் சம்மதத்துடன் சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்களுக்கு முன்கூட்டியே விவரம் தெரிவிக்க வேண்டும்95 நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் 53 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
உதவி படம்.
உதவி படம்.
Published on

திருப்பூர்

தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த் அறிவுரையின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் தமிழரசி, கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி ஆகியோர் அறிவுரையின்படி, திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ஜெயக்குமார் தலைமையில் தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் திருப்பூர் மாநகரம், காங்கயம், தாராபுரம், உடுமலை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் தேசிய பண்டிகை விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று, பணிக்கு அமர்த்திய தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் அல்லது சம்பளத்துடன் மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக தொழிலாளர்களின் சம்மதத்துடன் சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்களுக்கு முன்கூட்டியே விவரம் தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அவ்வாறு தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா என்று ஆய்வு நடத்தினார்கள்.

இதில் சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 52 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 32 உணவு நிறுவனங்கள், 11 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 95 நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் 53 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com