கும்பாபிஷேக விழா ஆலோசனைக்கூட்டம்

சுமார் 300 ஆண்டுகள் பழமையான பொன்காளியம்மன் கோவில் உள்ளது. வரும் 2024 மாசி மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்தவும் ஆலோசனை செய்யப்பட்டது.
ஆலோசனை கூட்டம் நடைபெற்ற கட்சி.
ஆலோசனை கூட்டம் நடைபெற்ற கட்சி.
Published on

பல்லடம்,

பல்லடம் கடைவீதியில், சுமார் 300 ஆண்டுகள் பழமையான பொன்காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில்,தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கோவில் கும்பாபிஷேக விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் பொன்காளியம்மன் கோவிலில் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம், பல்லடம் அறநிலையத்துறை ஆணையர் ராமசாமி, திருப்பணிகுழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கும்பாபிஷேக விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்வது குறித்தும், வரும் 2024 மாசி மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்தவும் ஆலோசனை செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com