பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகள்- ரூ.15 லட்சத்துக்கு விற்பனை

காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது 40 மாடுகள் மொத்தம் ரூ.15 லட்சத்துக்கு விற்பனையாயின.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

காங்கயம்,செப்.25-

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 68 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன.

இதில் 40 மாடுகள் மொத்தம் ரூ.15 லட்சத்துக்கு விற்பனையாயின.இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.80 ஆயிரத்துக்கு கன்றுக் குட்டியுடன் காங்கேயம் இன காரி வகைப் பசு விற்பனையானது. 

X

Maalai Malar
www.maalaimalar.com