ஜெயிலர் படம் ரிலீஸ் - திருப்பூர் தியேட்டர்களில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

திருப்பூர் திரையரங்குகளில் படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் குவிந்தனர். ரசிகர்கள் படம் வெற்றி அடைய வேண்டும் என வேண்டி 108 தேங்காய்களை உடைத்தனர்.
பட்டாசு வெடித்து கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்.
பட்டாசு வெடித்து கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்.
Published on

திருப்பூர்:

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியானது. திருப்பூர் திரையரங்குகளில் படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் குவிந்தனர். திருப்பூர் உஷா திரையரங்கம் முன்பு படத்தை காண குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க கொண்டாடினர். பின்னர் நடிகர் ரஜினியின் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தும் கேக் வெட்டியும் கொண்டாடினர்.

அதேபோல சக்தி திரையரங்கின் முன்பு குவிந்த ரசிகர்கள் படம் வெற்றி அடைய வேண்டும் என வேண்டி 108 தேங்காய் உடைத்து ரஜினி படத்திற்கு கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com