இடுவாய் - மங்கலம் ஊராட்சியில் ஊரக வேலை திட்டப்பணிகளை எம்.பி., ஆய்வு

ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுடன் கோரிக்கைகளை கேட்டறிந்து கலந்துரையாடினார்.சமுதாயகூடத்தில் மக்கள் சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இடுவாய் ஊராட்சியில் பி.ஆர்.நடராஜன் எம்.பி.,   கோரிக்கை மனுக்களை வாங்கிய போது எடுத்த படம். மங்கலம் ஊராட்சியில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., கோரிக்கை மனுக்களை வாங்கிய போது எடுத்த படம்.
இடுவாய் ஊராட்சியில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., கோரிக்கை மனுக்களை வாங்கிய போது எடுத்த படம். மங்கலம் ஊராட்சியில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., கோரிக்கை மனுக்களை வாங்கிய போது எடுத்த படம்.
Published on

மங்கலம் :

திருப்பூர் மாவட்டம்,திருப்பூர் ஒன்றியம்,இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட சீரங்ககவுண்டம்பாளையம் பகுதியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை பணித்தளத்தில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுடன் கோரிக்கைகளை கேட்டறிந்து கலந்துரையாடினார்.பின்னர் இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் உள்ள சமுதாயகூடத்தில் மக்கள் சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.இந்த நிகழ்ச்சியில் இடுவாய் ஊராட்சி மன்றத்தலைவர் கே.கணேசன் வரவேற்புரை ஆற்றினார்.மேலும் இதில் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன்,திருப்பூர் தெற்கு தாசில்தார்,திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் பிரபு பாலசுப்பிரமணியம்,இடுவாய் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பரமசிவம்,இடுவாய் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .

இதனைத் தொடர்ந்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்திருப்பூர் ஒன்றியம்,மங்கலம் ஊராட்சி மங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.இதில் மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி,மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகிஎபிசியண்ட் மணி,மற்றும் மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com