வெள்ளக்கோவில் - பல்லடத்தில் ஆ.ராசா எம்.பி., மீது போலீசில் புகார்

இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மனுவில் கூறியிருந்தனர். பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த காட்சி.
பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த காட்சி.
Published on

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில், பாஜக நகர தலைவர் ஆர்.அருண்குமார் மற்றும் நிர்வாகிகள், இந்து முன்னணி சார்பில் மாவட்ட செயலாளர் ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள், விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மாவட்ட இணை செயலாளர் டி.சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆ. ராசா எம்.பி., இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மனுவில் கூறியிருந்தனர்.

பல்லடம் வடக்கு ஒன்றிய பாஜக. தலைவர் பூபாலன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ரமேஷ் குமார், மற்றும் பாஜ.க நிர்வாகிகள் நித்யா,பூபதி,மகேஷ், குருமூர்த்தி, உள்ளிட்ட நிர்வாகிகள் ஆ.ராசா எம்.பி., மீது பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com