கண்ெடய்னர் லாரி மோதி ஐஸ் வியாபாரி பலி

கரடிவாவி பகுதியில் ஐஸ் வியாபாரம் செய்து விட்டு பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.எதிரே வந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

பல்லடம்

கோவை மாவட்டம் சூலூர் செங்கதுறையை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 65). இவர் மொபட் வாகனத்தில் ஐஸ் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கரடிவாவி பகுதியில் ஐஸ் வியாபாரம் செய்து விட்டு பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறி மொபட்டுடன் மாரிமுத்து ரோட்டில் விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி கிடந்தார். அக்கம் -பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரது மகன் சரவணக்குமார் கொடுத்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் செய்த கண்டெய்னர் லாரி குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com