முத்தூரில் மனுநீதி நாள் முகாம் நாளை நடக்கிறது

முத்தூர் - கொடுமுடி சாலை சிவகங்கா திருமண மண்டபத்தில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொள்கிறார்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

காங்கயம் :

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மனுநீதி நாள் முகாம் முத்தூர் - கொடுமுடி சாலை சிவகங்கா திருமண மண்டபத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. முகாமிற்கு கலெக்டர் எஸ்.வினீத் தலைமை தாங்குகிறார். தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, பஸ் வசதி, சாலை வசதி உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொள்கிறார்.

மேலும் முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உட்பட பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வருவாய் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com