இந்து முன்னணி மாநில செயற்குழு கூட்டம்

விநாயகா் சதுா்த்தி விழா தமிழகத்தின் பல இடங்களில் சுமூகமான முறையில் சிறப்பாக நடைபெற்றது.ஒத்துழைப்பு அளித்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர்  :

இந்து முன்னணி அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூரை அடுத்த கொடுவாயில் நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் அண்மையில் நடைபெற்ற இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார யாத்திரை மாபெரும் வெற்றியடைந்துள்ளது. விநாயகா் சதுா்த்தி விழா தமிழகத்தின் பல இடங்களில் சுமூகமான முறையில் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு அளித்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.

அதேவேளையில், சென்னையில் கடந்த ஜூலை 31 ந்தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து கலை இலக்கிய முன்னணி மாநிலப் பொறுப்பாளா் கனல் கண்ணன் பேசியது ஜனநாயக ரீதியான அவரது கருத்தாகும். ஆனால், திராவிடர் கழகத்தின்ர கொடுத்த புகாரின் பேரில் தமிழக அரசு தனிப்படை அடைத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தது கருத்து சுதந்திரத்தை ஒடுக்கி இந்துக்களின் குரல்வளையை நசுக்கும் செயலாகும். ஆகவே, கருத்துரிமையை நசுக்கி ஒருதலைப்பட்சமாக செயல்படும் தமிழக அரசுக்கு கண்டணம் தெரிவித்துக் கொள்வது.இந்து தெய்வங்களை சமூக வலைதளங்களில் இழிவுபடுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com