வட மாநில தொழிலாளியை கடத்திய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

டாட்டூ தினேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் உள்ளார்.காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள டாட்டூ தினேஷ்.
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள டாட்டூ தினேஷ்.
Published on

பல்லடம் :

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :- பல்லடம் அருகே சின்னக்கரையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஷாஜி மண்டல் என்பவரை கடத்தி அவரிடமிருந்து பணம் பறித்த வழக்கில் டாட்டூ தினேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் உள்ளார். இந்த நிலையில் அவர் மீது சென்னை, திருப்பூர், பெருமாநல்லூர், பல்லடம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இதையடுத்து பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்ட் சவுமியா முன்மொழிவின்படி, திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சசாங் சாய் பரிந்துரையின் பேரில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து டாட்டூ தினேஷ் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அதற்கான உத்தரவுக் கடிதம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டாட்டூ தினேஷிடம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com