கோப்பு படம்.
கோப்பு படம்.

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.15 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை ஏலம் நடைபெற்றது.சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
Published on

அவிநாசி:

அவிநாசியை அடுத்த சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை ஏலம் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் கொள்முதல் செய்தனா்.

ஏலத்தில் முதல் தர நிலக்கடலை குவிண்டாலுக்கு ரூ.7,850 முதல் ரூ.8,260 வரையிலும், இரண்டாம் தரம் ரூ.7,400 முதல் ரூ.7,650 வரையிலும், மூன்றாம் தரம் ரூ.6,820 முதல் ரூ.7,400 வரையிலும், பச்சை நிலக்கடலை ரூ.2,730 முதல் ரூ.3,930 வரையிலும் விற்பனையானது.

ஏலத்தில் மொத்தமாக ரூ.15 லட்சம் மதிப்பிலான நிலக்கடலை விற்பனையானதாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். 

X

Maalai Malar
www.maalaimalar.com