எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா்க்கும் நாள் கூட்டம் - வருகிற 31-ந்தேதி நடக்கிறது

இக்கூட்டத்தில் அனைத்து எரிவாயு முகவா்கள், எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான மாதாந்திர குறைதீா்க்கும் நாள் கூட்டம் வருகிற 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை ) நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான மாதாந்திர குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 31-ந்தேதி ( செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் நடைபெறுகிறது.மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து எரிவாயு முகவா்கள், எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா்.

ஆகவே திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா்கள் புகாா்கள், குறைபாடுகள் இருந்தால் தங்களது எரியாவு இணைப்புப் புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com