சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரண்ட்லைன் குழுமம் பள்ளி மாணவர்கள் பேரணி

வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி தங்களது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினர். விடுதலைப் போராட்ட வீரர்கள், தேச தலைவர்கள், செஸ் ஒலிம்பியாட் சிறப்புகள் போன்ற வேடம் அணிந்து மாணவர்கள் சென்றனர்.
பேரணி நடைபற்ற காட்சி.
பேரணி நடைபற்ற காட்சி.
Published on

வீரபாண்டி :

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருப்பூர் தாராபுரம் சாலை கோவில் வழி பகுதியில் உள்ள பிரண்ட்லைன் குழுமம் பள்ளி மாணவர்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி தங்களது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினர்.மேலும் திருப்பூர் - காங்கயம் சாலையில் பேரணியை நடத்தினர். பேரணியை பிரண்ட்லைன் குழும பள்ளிகளின் தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவகாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

விடுதலைப் போராட்ட வீரர்கள், தேச தலைவர்கள், செஸ் ஒலிம்பியாட் சிறப்புகள் போன்ற வேடம் அணிந்து மாணவர்கள் சென்றனர்.பேரணிக்கு திருப்பூர் நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு கொடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com