ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் இலவச மரக்கன்றுகள்

தமிழ்நாடு வனத்துறை சார்பாக தாராபுரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா ஊர்வலம் நடைபெற்றது. அனைவரும் வாங்கி மரக்கன்றுகள் நட்டு மழை பெறுவோம் என்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் காட்சி.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் காட்சி.
Published on

தாராபுரம்

தமிழ்நாடு வனத்துறை சார்பாக தாராபுரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா ஊர்வலம் நடைபெற்றது. இதில் வனத்துறை வனச்சரகர் சுப்புராஜ் ,வனவர் சேக்உமர், உதவி இயக்குனர் கணேஷ் ராம், துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா, கல்லூரி முதல்வர் விக்டர் லூயிஸ் மற்றும் அலுவலர்கள், தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் தாராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு அண்ணா நகர், சி .எஸ். ஐ. நகர் வழியாக கொட்டாம்புளி பாளையம் ரோட்டில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வரை நடைபெற்றது.

விழாவில் வனச்சரகர் கூறும் போது, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருப்பூர் வனவியல் விரிவாக்க சரகத்தின் மூலம் விவசாயிகள், தொழிற்சாலைகள், தன்னார்வலர்கள், பூங்காக்கள் ,அரசு அலுவலர்கள் ,தனியார் நிலங்கள், மாநகராட்சி ,நகராட்சி மற்றும் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது .

இதனை பயன்படுத்தி அனைவரும் வாங்கி மரக்கன்றுகள் நட்டு மழை பெறுவோம் என்றார்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com