பல்லடம் அருகே விவசாயிகளுக்கு வேளாண்மை துறை சார்பில் இலவச தென்னங்கன்றுகள்

120 குடும்பங்களுக்கு மொத்தம் 360 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
 இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டதை படத்தில் காணலாம்.
 இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டதை படத்தில் காணலாம்.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சியில் கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒரு குடும்பத்திற்கு மூன்று தென்னங் கன்றுகள் வீதம் 120 குடும்பங்களுக்கு மொத்தம் 360 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி வடுகபாளையம் புதூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகவளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு வேளாண் உதவி அலுவலர் தீப்சீலா தலைமை வகித்தார்.கிராம நிர்வாக அலுவலர் சுகன்யா முன்னிலை வகித்தார் .விழாவில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணிமேகலை அன்பரசு,ஆகியோர் வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் வார்டு மெம்பர்கள், மதிமுக நகர செயலாளர் வைகோ பாலு, ஊராட்சி செயலர் கிருஷ்ணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com