தீயணைப்பு வீரரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

கண்காணிப்பு கேமராக்களில் பதிவான பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பல்லடம்:

பல்லடம் அண்ணாநகரில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிபவர் பாலகிருஷ்ணன்(வயது 42). இவர் தனது மோட்டார் சைக்கிளை தீயணைப்பு நிலையம் முன்பு நிறுத்திவிட்டு அலுவலகத்திற்குள் வேலை செய்து கொண்டிருந்தார். 

உணவு இடைவேளையில் மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றபோது அதனைக் காணவில்லை. இதையடுத்து மோட்டார் சைக்கிள் திருட்டு குறித்து பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார்.அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com