பல்லடம் நூல் மில்லில் தீ விபத்து - பல லட்சம் மதிப்புள்ள எந்திரங்கள் சேதம்

நூல் மில்லில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 5 தண்ணீர் லாரிகள் மூலம் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
நூல் மில்லில் கொளுந்து விட்டு எரியும் தீயை படத்தில் காணலாம்.
நூல் மில்லில் கொளுந்து விட்டு எரியும் தீயை படத்தில் காணலாம்.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள மாணிக்கபுரம் ரோடு பிரிவில் தனியாருக்கு சொந்தமான நூல் மில் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு திடீர் மின் கசிவு காரணமாக எந்திரத்தில் பற்றிய தீ அருகே இருந்த பஞ்சுமூட்டைகளில் பற்றியதால் மளமளவென கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.

இதையடுத்து அங்கிருந்த தொழிலாளர்கள் பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் தீயணைப்பு படையினர் மற்றும் 5 தண்ணீர் லாரிகள் மூலம் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதற்குள் பஞ்சு மற்றும் எந்திரங்கள் உள்ளிட்டவைகளில் பற்றிய தீ கட்டிடத்தின் மீதும் பற்றி எரிந்ததால் தீயை அணைப்பதற்கு தாமதமானது. இதில் பல லட்சம் மதிப்பிலானஎந்திரங்கள்,பஞ்சு மூட்டைகள், நூல் மூட்டைகள் எரிந்து சேதமாகின. இந்த திடீர் தீ விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com