பாலியல் தொல்லை கொடுக்கும் மாமனார் - ஆர்.டி.ஓ.விடம் பெண் மனு

வீட்டில் தனியாக இருந்த என்னிடம் எனது மாமனார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றார். போலீசார் நடவடிக்கை எடுத்து எனக்கும் எனது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

உடுமலை:

உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கொமரலிங்கத்தை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் ஆர்.டி.ஓ.விடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

கொமரலிங்கம் பகுதியில் மகன், மகளுடன் வசித்து வருகிறேன். எனது கணவர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த என்னிடம் எனது மாமனார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றார். இது பற்றி கொமரலிங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன்.

அதன்பேரில் எனது மாமனார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் போலீசார் எனது மாமனாரை கைது செய்ய முன்வரவில்லை. இதை சாதகமாக கொண்டு அவர் என்னை அச்சுறுத்தி வருகிறார். இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து எனக்கும் எனது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com