பொய் வழக்கு போடப்பட்டதை கண்டித்து திருப்பூரில் விவசாயிகள் -பொதுமக்கள் போராட்டம்

பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.போலீசார் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர் : 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அனுப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் இரும்பு உருக்காலைக்கான அனுமதியை ரத்து செய்ய க்கோரி அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆதரவு தெரி வித்திருந்தனர்.இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவன தலைவர் ஈசன் உள்ளிட்டோர் மீது போலீ சார் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் அனுப்பட்டி கிராம மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்ட குழுவினர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக விவசாயிகள்- பொதுமக்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com