தனியாா் பேருந்தில் அடிபட்ட மயிலை மீட்டு சிகிச்சை அளித்த விவசாயி

பெண் மயில் பேருந்தின் முகப்பு கண்ணாடியில் அடிபட்டு காயமடைந்தது.பேருந்தில் அடிபட்ட காயமடைந்த மயிலை மீட்டு முதலுதவி அளித்த பெரியசாமியை பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டினா்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

அவிநாசி:

புளிம்பட்டியில் இருந்து அவிநாசி நோக்கி குரும்பபாளையம் அருகே தனியாா் பேருந்து வந்தபோது, அவ்வழியாக பறந்து வந்த பெண் மயில் பேருந்தின் முகப்பு கண்ணாடியில் அடிபட்டு காயமடைந்தது. இதில் பேருந்தின் முகப்பு கண்ணாடி முழுவதும் உடைந்தது.

மேலும், பலத்த காயமடைந்த மயிலை அப்பகுதியைச் சோ்ந்த விவசாயி பெரியசாமி என்பவா் மீட்டு, சேவூா் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று சிகிச்சை அளித்தாா். தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், மயிலை மீட்டு வனப் பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றாா்.

இதில் கடந்த பிப்ரவரி மாதம் தனது தோட்டத்துக்குள் நாய்கள் துரத்தி வந்த புள்ளிமானை மீட்டு வனத் துறையினரிடம் பெரியசாமி ஒப்படைத்தாா்.

அதேபோல தற்போது பேருந்தில் அடிபட்ட காயமடைந்த மயிலை மீட்டு முதலுதவி அளித்த பெரியசாமியை பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டினா். 

X

Maalai Malar
www.maalaimalar.com